
ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா, பூனம் பாண்டே மற்றும் ஷெர்லின் சோப்ரா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீன்
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச பட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இருந்து இறுதியாக விடுதலை பெற்றுள்ளார். ஆபாசமான படங்களை தயாரித்து ஓடிடி தளத்தில் வெளியிட்ட வழக்கில் ராஜ் குந்த்ராவுடன் மாடல் அழகிகளான ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே மற்றும் உமேஷ் காமத் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விசாரணைக்கு தேவைப்பட்டால் ஒத்துழைக்குமாறும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த மாதம், மகாராஷ்டிரா சைபர் போலீசார் ஆபாச வழக்கில் ராஜ் குந்த்ரா, ஷெர்லின் சோப்ரா மற்றும் பூனம் பாண்டே மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மும்பையைச் சுற்றியுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ராஜ் குந்த்ரா ஆபாசமான படங்களை படம்பிடித்து ஓடிடி தளங்களுக்கு விற்றதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ் குந்த்ரா கோடிக்கணக்கில் பரிவர்த்தனை செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. ராஜ் இந்தப் படங்களை பூனம் மற்றும் ஷெர்லினுடன் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜ் குந்த்ரா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவரது வழக்கறிஞர் அறிக்கை வெளி வந்தது. இதுபற்றி ஊடகங்கள் மூலம் தான் தெரிந்து கொண்டதாகவும், சட்டப்படி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பிறகு குற்றப்பத்திரிகையின் நகலை பெற்றுக் கொள்வதாகவும் வழக்கறிஞர் சொல்லியிருந்தார். இதுமட்டுமின்றி, ஊடக அறிக்கைகளிலும், எஃப்ஐஆருக்கும் தனது கட்சிக்காரருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வழக்கறிஞர் வாதிட்டிருந்தார் .