
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘சூப்பர்ஸ்டார்’ வாழ்த்து..!!
தமிழக அமைச்சரவையின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, ஏ.வி.வேலி ஆகியோர் தலைமைச் செயலகம் வந்தடைந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமர வைத்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கையில் அமர்ந்து பதவி ஏற்றார். புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூத்த அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் புதிய அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள என் அன்பு சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.