
அமைச்சர் உதயநிதிக்கு கவிதைகளால் வாழ்த்து கூறிய வைரமுத்து..!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான். இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது. உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள். தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக!. அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.