அமைச்சரான உதயநிதி…வெடி வெடித்து கொண்டாடிய தி.மு.க. இளைஞரணி..!!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவையொட்டி வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் நகர தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார் தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர்கள், நகர தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன், ஆலங்காயம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் கார்த்திக் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றியச் செயலர் தாமோதரன், துணை அமைப்பாளர் எஸ்.ராஜா, முன்னாள் ஒன்றியச் செயலர் அசோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *