அமைச்சரான உதயநிதியை வாழ்த்திய கமல்ஹாசன்..!!

தமிழக அமைச்சரவையின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, ஏ.வி.வேலி ஆகியோர் தலைமைச் செயலகம் வந்தடைந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமர வைத்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கையில் அமர்ந்து பதவி ஏற்றார். புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூத்த அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் புதிய அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *