அப்பாவை போல் முதல் ரஞ்சி போட்டியிலே அர்ஜுன் டெண்டுல்கர் அசத்தல்..!

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் கோவாவுக்கு மாறினார். இதுவரை மும்பை மற்றும் கோவா அணிகளுக்காக 7 டெஸ்ட் ஏ மற்றும் 9 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். அர்ஜுன் டெண்டுல்கர் இந்த ஆண்டு ரஞ்சி கோப்பையில் அறிமுகமானார். கோவா – போர்வோரிமில் ராஜஸ்தானுக்கு எதிராக கோவா முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாளில் கோவா 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது. பிரபு தேசாய் 81 ரன்களுடனும், அர்ஜுன் டெண்டுல்கர் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று இரு வீரர்களும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். 23 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் ரஞ்சி போட்டியில் 177 பந்துகளில் சதம் அடித்தார். சச்சின் டெண்டுல்கர் தனது முதல் ரஞ்சி போட்டியில் சதம் அடித்தது போல், அர்ஜுனும் சதம் அடித்தார். கோவா அணி 140 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பிரபு தேசாய் 172 ரன்களுடனும், அர்ஜுன் டெண்டுல்கர் 112 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *