
அன்புத் தம்பி உதயநிதிக்கு வாழ்த்து – நடிகர் ரஜினி
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.