
அஜித் படத்தில் வில்லனாகும் முன்னணி நடிகர்?
முன்னணி கதாநாயகர்கள் மற்ற நடிகர்களின் படங்களில் வில்லனாகவோ, சில நிமிடங்கள் வந்துபோகும்படியான கவுரவத் தோற்றத்திலே நடிக்க சம்மதம் சொல்கிறார்கள். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்க தனுசிடம் பேசி வருவதாகவும் தனுசும் வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்றும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.