விடிந்தால் திருமணம் என்ற நிலையில் மணப்பெண் தற்கொலை

விடிந்தால் திருமணத்தில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நவிபேட்டில் வசிப்பவர் ரவாலி (22). இவருக்கும், அத்தீ பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக நேற்று முன்தினம் மெகந்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் இரு குடும்பத்தினரும் உறவினர்கள் கலந்து கொண்டனர். விடிந்தால் கல்யாணம் என்ற விஷயத்தில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது மணமகன் சந்தோஷ், மணமகள் ராவலிடம், திருமணம் முடிந்து வேலைக்கு செல்ல வேண்டும் என்றும், திருமணத்திற்கு பின் சொத்தை பிரித்து தர வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இரவு மணப்பெண் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணமகன் வீட்டார் மீது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். தற்போது ரவாளி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *