
ரிலீசுக்கு முன்னே விஜய்யை ஓரம் கட்டிய அஜித்..!!
நடிகர் அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3வது முறையாக இணைந்துள்ள படம் ‘துணிவு’. நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், யாருக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்தன. முன்னதாக, ‘துணிவு’ படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனர் உதயநிதி ஸ்டாலின், ‘பொங்கலுக்கு சமமான தியேட்டர்களில் துணிவும், வாரிசும் வெளியாகும்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், இறுதி நிலவரங்கள் குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வாரிசு படத்தை விட அதிக தியேட்டர்களில் துணிவு வெளியாகவுள்ளது. மேலும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் துணிவு படம் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.