
மீண்டும் ரசிகர்களை சந்தித்த ‘தளபதி’..!!
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வரவுள்ளதால், படக்குழு அதன் புரமோஷன் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. விஜய் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக பனையூர் அலுவலகத்தில் மீண்டும் ரசிகர்களை சந்தித்தார் விஜய். இந்த கூட்டத்தில் வாரிசு படத்தை வெளி மாவட்ட மக்களிடம் கொண்டு சேர்க்க என்னென்ன விளம்பர உத்திகளை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்திற்கு பிறகு வழக்கம் போல் பிரியாணி விருந்தும் சுமூகமாக நடந்தது.