
மதுரை ஆதீன நிலத்தை மீட்க அறநிலையத்துறைக்கு உத்தரவு
மதுரை விமான நிலையம் அருகே ஆதின மடத்துக்குச் சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போதிய பாதுகாப்பு அளிக்க போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். மறைந்த ஆதீனம் புதுச்சேரி நிறுவனத்துக்கு ரூ.5 லட்சத்துக்கு ஒப்பந்தம் போட்டது வழக்கில் அம்பலமாகியுள்ளது.