
பொது இடத்தில் வித்யா பாலனுக்கு நேர்ந்த விபரீதம்..!!
நடிகர் சன்னி கபூருக்கும் குனீத் மோங்காவுக்கும் மும்பையில் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன், புதுமணத் தம்பதிகள் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் உறவினர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை வித்யா பாலன் தனது கணவருடன் கலந்து கொண்டார். நுழைவாயிலுக்குள் நுழையும் போது எதிரே வந்த ஒருவர் சேலையை பிடித்து இழுத்தார். உடனே மீண்டு வந்த வித்யா பாலன் சேலையை இறுக்கிப்பிடித்து சுவரைப் பக்கம் திருப்பினார். ஆனால் எதுவும் நடக்காதது போல் அந்த நபர் மன்னிப்பு கூட கேட்காமல் கடந்து சென்றார். இந்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.