
பில்கிஸ் பானோ வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு – காரணம் என்ன?
குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்து அவரது குழந்தை மற்றும் குடும்பத்தினரைக் கொன்ற 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்தது. இந்த விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மறுத்து, நீதிபதி பேலா திரிவேதி, அதை விசாரிக்க விரும்பவில்லை என்று கூறினார். வழக்கை விசாரிக்க மறுத்ததற்கான காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.