
பாஜகவை தோற்கடிப்பதே எனது இலக்கு : நிதிஷ் குமார்
2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தற்போதைய துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் நடைபெறும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சூசகமாக தெரிவித்துள்ளார். குமார் இனி முதல்வர் அல்லது பிரதமராக விரும்பவில்லை, அதற்கு பதிலாக, “தேஜஸ்வி ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்று கூறினார். நிதிஷ், “நாங்கள் நிறைய செய்து வருகிறோம். எதிர்காலத்தில் ஏதாவது செய்ய மீதி இருந்தால், தேஜஸ்வி தொடர்ந்து பணியாற்றுவார்” என்றார்.