சாரதா மடத்தின் தலைவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி..!!

கொல்கத்தாவைச் சேர்ந்த சாரதா மடத்தின் தலைவர் பிரவ்ராஜிகா பக்திபிரணா காலமானார். அவருக்கு வயது 102. சாரதா மடம் மற்றும் ராமகிருஷ்ண சாரதா மிஷன் என்பது மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் தலைமையிடமாகக் கொண்ட ஒரு ஆன்மீக அமைப்பாகும். பிரவ்ராஜிகா பக்திபிரனா 2009 முதல் இந்த அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். 102 வயதான பிரவ்ராஜிகாவுக்கு கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சனிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரவ்ராஜிகா உயிரிழந்தார். பிரவ்ராஜிகா பக்திபிரானாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரவ்ராஜிகா பக்திபிரான் மாதாஜிக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீ சாரதா மடம் மற்றும் ராமகிருஷ்ண சாரதா மிஷன் மூலம் சமுதாயத்திற்கு சேவை செய்ய அவர் செய்த பெரும் முயற்சிகளுக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். எனது எண்ணங்கள் அந்த நிர்வாகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பக்தர்களிடம் உள்ளது. ஓம் சாந்தி. என பதிவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *