
‘ஒற்றுமை யாத்திரையின் 100வது நாள்’…பிரமாண்டமாக கொண்டாட திட்டம்..!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீநகர் வரை நடந்தார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், அதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் நடைபயணம் நடத்துகிறார். இந்நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100வது நாளை கூடுதல் சிறப்புடன் கொண்டாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி 100வது நாளான வரும் 16ம் தேதி ஜெய்ப்பூரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடகி சுனிதி சவுகான் தலைமையிலான இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர். இவ்வாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். இந்த முக்கியமான 100 நாள் யாத்திரையில் ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி மற்றும் அனைத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஒருமைப்பாட்டு யாத்திரைக்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் நமோநாராயண் மீனா, பிரதமர் நரேந்திர மோடியின் பொய்களை இந்த யாத்திரை மூலம் ராகுல் காந்தி அம்பலப்படுத்துகிறார் என்றார்.