இலவச மருத்துவ பரிசோதனைகள்..டெல்லி முதல்வரின் அசத்தல் அறிவிப்பு..!!

பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் மருத்துவம் வழங்குவதே ஆம் ஆத்மி அரசின் நோக்கம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மாநில மக்களுக்கு 450 வகையான மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தரமான சிகிச்சையின் விலை அதிகம் என்பதால், சாமானியர்கள் மருத்துவப் பரிசோதனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர் என்றும், இந்த திட்டம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கெஜ்ரிவால் கூறினார். இந்த திட்டம் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *