
“இந்திய வீரர்களுக்கு கடுமையான காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை” – மத்திய அமைச்சர்
இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். அதில், “அருணாச்சல பிரதேச எல்லையில், இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் யாரும் பலத்த காயமோ, உயிரிழப்போ இல்லை. எல்லையை பாதுகாக்க, இந்திய ராணுவம் எப்போதும் தயாராக உள்ளது.