
இந்தியாவில் 100-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு..நிம்மதியில் மக்கள்..!!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. இதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 114 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 75 ஆயிரத்து 95 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 40 ஆயிரத்து 592 பேர் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 3 ஆயிரத்து 845 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 658 ஆக உள்ளது.அதே நேரத்தில் நாடு முழுவதும் 219 கோடியே 97 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.