
“இது மிகவும் தாமதமானது” – அமைச்சர் பொன்முடி
உதயநிதிக்கு அமைச்சர் பதவியை முதல்வர் ஸ்டாலின் தாமதமாக வழங்கியுள்ளார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “முதலில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்க வேண்டும். வாரிசு அரசியல் குற்றச்சாட்டு புதிதல்ல, முதல்வர் ஸ்டாலின் அரசியலுக்கு வந்ததில் இருந்தே உள்ளது,” என்றார்.