இந்தியன் சூப்பர் லீக் : சென்னை அணி தோல்வி – Dinaseithigal

இந்தியன் சூப்பர் லீக் : சென்னை அணி தோல்வி

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி-ஒடிசா அணிகள் மோதின.

பரபரப்பான இந்த போட்டியில் ஒடிசா அணி சார்பில் வாஃபா ஆட்டத்தின் 31-வது நிமிடத்திலும் டியாகோ 49-வது நிமிடத்திலும் நந்தகுமார் 90+7-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். சென்னை அணி சார்பில் கயாட்டி ஆட்டத்தின் 60-வது நிமிடத்திலும் 90+4-வது நிமிடத்திலும் என இரண்டு கோல்கள் அடித்தார். இதையடுத்து ஒடிசா அணி 3-2 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *