உலக கோப்பை கால்பந்து : இங்கிலாந்து அமெரிக்கா இன்று மோதல் – Dinaseithigal

உலக கோப்பை கால்பந்து : இங்கிலாந்து அமெரிக்கா இன்று மோதல்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் முதல் ஆட்டத்தை முடித்துவிட்ட நிலையில், இன்று முதல் 2-வது போட்டியில் விளையாடுகின்றன.

அதன்படி குரூப் ‘பி’ பிரிவில் இன்று நடைபெறும் போட்டிகளில் வேல்ஸ்-ஈரான் (மாலை 3.30), இங்கிலாந்து-அமெரிக்கா (நள்ளிரவு 12.30 ) அணிகள் மோதுகின்றன. வேல்ஸ் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. ஈரான் அணி 2-6 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது.

இதனால் இரு அணிகளும் முதல் வெற்றிக்காக போராடும். இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் ஈரானை வீழ்த்திய நிலையில், 2-வது வெற்றிக்காக அமெரிக்காவுடன் மல்லுக்கட்டுகிறது. அமெரிக்க அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *