உலக கோப்பை கால்பந்து போட்டி : கத்தார்-செனகல் அணிகள் இன்று மோதல் – Dinaseithigal

உலக கோப்பை கால்பந்து போட்டி : கத்தார்-செனகல் அணிகள் இன்று மோதல்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் முதல் ஆட்டத்தை முடித்துவிட்ட நிலையில், இன்று முதல் 2-வது போட்டியில் விளையாடுகின்றன.

அதன்படி ‘ஏ’ பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் கத்தார்-செனகல் (மாலை 6.30), நெதர்லாந்து-ஈக்வடார் ( இரவு 9.30) அணிகள் மோதுகின்றன. போட்டியை நடத்தும் கத்தார் தொடக்க ஆட்டத்தில் 0-2 என்ற கணக்கில் ஈக்வடாரிடமும் , செனகல் 0-2 என்ற கணக்கில் நெதர்லாந்திடமும் தோற்று இருந்தன.

இதனால் முதல் வெற்றியை பெறப் போவது யார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்து , ஈக்வடார் அணிகள் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. எனவே 2-வது வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *