முதல் ஒருநாள் போட்டி : நியூசிலாந்து அணிக்கு 307 ரன்கள் நிர்ணையித்தது இந்தியா – Dinaseithigal

முதல் ஒருநாள் போட்டி : நியூசிலாந்து அணிக்கு 307 ரன்கள் நிர்ணையித்தது இந்தியா

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று பகல்-இரவாக நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் – சுப்மன்கில் களமிறங்கினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்த நிலையில், 50 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மன் கில் அவுட் ஆனார். அடுத்த சில நிமிடங்களில் 77 பந்துகளில் 72 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் தவான் ஆட்டமிழந்தார்

தொடர்ந்து ரிஷப் பண்ட் 15 ரன்னிலும் சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் – சாம்சன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். சாம்சன் 36 ரன்னில் அவுட் ஆனார். அதனையடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 16 பந்தில் 37 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரி 3 சிக்சர் அடங்கும்.இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *