கேரளாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணை வெளியீடு – Dinaseithigal

கேரளாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

கேரளாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணையை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2023 மார்ச் 9ஆம் தேதி முதல் மார்ச் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான மாதிரி தேர்வுகள் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 10-தேதி வெளியிடப்படுகிறது.

அதேபோல 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 10-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடைகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வானது பிப்ரவரி 1-ம் தேதி தொடங்க உள்ளது. அத்தோடு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 25ஆம் தேதிக்குள் வெளியிட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *