போதை பொருள் விற்பனை தொடர்பாக கோஷ்டி மோதல் : 2 பேர் மரணம் – Dinaseithigal

போதை பொருள் விற்பனை தொடர்பாக கோஷ்டி மோதல் : 2 பேர் மரணம்

கேரளா மாநிலம் கண்ணூர் தலச்சேரி நெட்டூரை சேர்ந்த ஷபில் என்பவர், போதைப்பொருள் விற்பனை செய்வது தொடர்பாக, ஜாக்சன் என்ற நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாத்தின்போது ஜாக்சன் தாக்கியதில் காயமடைந்த ஷபில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை அறிந்த ஷபிலின் தந்தை ஷமீர் மற்றும் உறவினர்களான காலித், ஷானிப் ஆகியோர் ஜாக்சனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜாக்சன் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில், காலித் மற்றும் ஷமீர் உயிரிழந்தனர். கத்தி குத்து வாங்கி படுகாயமடைந்த ஷானிப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜாக்சன், ஃபர்ஹான், நவீன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், போதைப்பொருள் விற்பனை தொடர்பாக, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில், இருகும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *