கனடாவில் பணிபுரிவோருக்கு வெளியான பிரத்தியேக தகவல் – Dinaseithigal

கனடாவில் பணிபுரிவோருக்கு வெளியான பிரத்தியேக தகவல்

கனடா நாட்டில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டமொன்றை மேற்கொள்ள விருந்த நிலையில் ஊதிய உயர்வை வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வேலை நிறுத்தப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஒன்டாரியோ மாகாண அரசாங்கத்திற்கும், தொழிற்சங்க ஊழியர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த சம்மதம் வெளியிடப்பட்டுள்ளது. அங்குள்ள தொழிற்சங்கத்தின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெஸ் கூறியுள்ளார் . இப்படியிருக்கவே,தொழிற்சங்கத்திற்கும் ஒன்டாரியோ அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட இணக்கத்தை அடுத்து வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *