மாணவிக்கு பாலியல் தொல்லை : தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது – Dinaseithigal

மாணவிக்கு பாலியல் தொல்லை : தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் வினோத் (34) அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து தங்களது பெற்றோருடன் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த திருநின்றவூர் போலீசார்,  தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *