மோகனூரில் 1,700 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் – Dinaseithigal

மோகனூரில் 1,700 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் நகர் பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று (நவம்பர் 24) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். இதில், வாகனத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 1,700 கிலோ ரேஷன் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றி டிரைவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *