ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் : இங்கிலாந்து அணி சறுக்கல் – Dinaseithigal

ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் : இங்கிலாந்து அணி சறுக்கல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் சறுக்கலை சந்தித்துள்ளது. 2வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணி 3வது இடத்திலும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முழுமையாக வென்றதன் மூலம் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா 4வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. பாகிஸ்தான் 5வது இடத்துக்கு சரிந்துள்ளது.

புதிய தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி 114 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இந்தியா 112 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், பாகிஸ்தான் 107 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 100 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளது. 7 முதல் 10 இடங்களில் முறையே வங்காளதேசம் ( 92 புள்ளிகள்), இலங்கை (92 புள்ளிகள்), வெஸ்ட் இண்டீஸ் (71 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் (69 புள்ளிகள்) அணிகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *