பிக்பாஸ் தொடரில் அவரை வாங்க பணம் இல்லை – சூர்யகுமார் யாதவ்க்கு மேக்ஸ்வெல் பாராட்டு – Dinaseithigal

பிக்பாஸ் தொடரில் அவரை வாங்க பணம் இல்லை – சூர்யகுமார் யாதவ்க்கு மேக்ஸ்வெல் பாராட்டு

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பதை போன்று ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்திய அணியின் சமீப காலமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் உச்சபட்ச பார்மில் இருப்பதால் அவரை வாங்கும் அளவிற்கு பிக்பாஷ் லீக் அணிகளிடம் பணம் இல்லை என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து தொடரில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை பாராட்டிய மேக்ஸ்வெல், வருங்காலத்தில் பிக் பாஷ் லீக்கில் சூர்யகுமார் ஒப்பந்தம் செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த போது, ” அவரை வாங்குவதற்கு எங்களிடம் போதுமான பணம் இல்லை. அவரை வாங்குவதற்கான பணத்தை ஈட்ட கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தத்தில் உள்ள ஒவ்வொரு வீரரையும் நாங்கள் நீக்க வேண்டும்” என புன்னகையுடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *