கல்லூரி ஆசிரியரை தாக்கிய நபர் பொலிஸில் சரண் – Dinaseithigal

கல்லூரி ஆசிரியரை தாக்கிய நபர் பொலிஸில் சரண்

இலங்கையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்குள் நுழைந்து ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் நேற்று இரவு 7:30 மணியளவில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த நபரை கைது செய்யக்கோரி நேற்றைய தினம் கல்லூரி ஆசிரியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு சந்தேக நபரை கைது செய்யுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவந்த போதிலும் பொலிசாரால் அந்த நபர் கைது செய்யப்படவில்லை. இப்படியிருக்கும் நிலையில் ஆசிரியரை தாக்கியவர் தானாக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதேசமயம் ஆசிரியரை தாக்கியவரை கைது செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும் உத்தரவு விடுத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *