பெருங்காயம் தரும் நன்மைகள் என்ன தெரியுமா? – Dinaseithigal

பெருங்காயம் தரும் நன்மைகள் என்ன தெரியுமா?

பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம். நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும். ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *