ரத்தசோகையை குணமாக்கும் காடை முட்டை..!! – Dinaseithigal

ரத்தசோகையை குணமாக்கும் காடை முட்டை..!!

உடலில் உண்டாகக்கூடிய அலர்ஜி காரணமாக மூக்கிலிருந்து நீர் வடிவது, தும்மல் மற்றும் உடல் சிவந்து காணப்படுவது இது போன்ற அலர்ஜி சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த காடை முட்டையை சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கக்கூடிய ஒரு வகையான புரதம் அலர்ஜியை எதிர்த்து அவை உண்டாகுவதை தடுக்கிறது.

உடலில் புதிய ரத்த உற்பத்திக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் இந்த காடை முட்டையில் அடங்கியிருக்கும். உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் இந்த முட்டையை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த அளவு சீராக இருக்கும்.

தினமும் காடை முட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலிமை அடையும். இதன் மூலமாக தொற்று நோய்கள் உண்டாகக் கூடிய பல்வேறு பிரச்சனைகள் தடுக்கப்படும். அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷம் இதுபோன்ற பிரச்சனைகளால் அவதிபடுபவர்கள் காடை முட்டையை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *