மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட கணவனை அடித்து கொன்ற நபர்கள் – Dinaseithigal

மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட கணவனை அடித்து கொன்ற நபர்கள்

இலங்கையில் மாத்தறை ஊருபொக்க பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கடவலகம பகுதியில் ஒருவரை மூன்று பேர் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று அதிகாலை நடைபெற்றுள்ளது. அதே பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்ட போது பக்கத்தில் வசிக்கும் மூன்று பேர் கணவரை தாக்கி கொன்றனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 32, 30 மற்றும் 19 வயது நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *