பிரான்சில் கத்திக்குத்துக்கு உள்ளான பெண் உயிரிழப்பு – Dinaseithigal

பிரான்சில் கத்திக்குத்துக்கு உள்ளான பெண் உயிரிழப்பு

பிரான்சில் உள்ள Évry-Courcouronnes (Essonne) நகரில் வசிக்கும் பெண் ஒருவர், கத்திக்குத்துக்கு உள்ளான நிலையில் கொல்லப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பொலிஸாருக்கு தொலைபேசி மூலமாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். அப்போது அங்குள்ள வீடொன்றில் 43 வயதுடைய பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளாகி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதில் அவரது 14 வயதுடைய மகள் ஒருவரே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த பெண் பல தடவைகள் கத்தியினால் குத்தப்பட்டுள்ளார் எனவும், தாக்குதல் நடத்தியது அந்த பெண்ணின் கணவர் எனவும், அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து தப்பி ஓடி தலைமறைவாகியிருந்த கணவர் நேற்று முன்தினம் காலை Viry-Chatillon நகரில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *