பிரான்ஸ் தலைநகரில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள் – Dinaseithigal

பிரான்ஸ் தலைநகரில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள்

பிரான்ஸ்சில் அமைந்துள்ள பாரிஸ் 19 ம் வட்டாரத்தில் சுகாதாரமற்ற முறையில் தங்கியிருந்த அகதிகள் பலர் நேற்று முன்தினம் காலை வெளியேற்றப்பட்டனர். இதில் Canal de l’Ourcq இற்கு அருகே முகாம்கள் அமைத்து தங்கியிருந்த அகதிகளே நேற்று முன்தினம் காலை வெளியேற்றப்பட்டனர். இதில் வெளியேற்றப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும், மொத்தமாக 354 பேர் வெளியேற்றப்பட்டனர் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்படி  வெளியேற்றப்பட்ட அகதிகள் அனைவரும் இல்-து-பிரான்சுக்குள் உள்ள பல்வேறு அகதி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *