வெளிநாடு ஒன்றில் நோய்வாய்ப்பட்ட நபர் தாயகம் திரும்பியதாக தகவல் – Dinaseithigal

வெளிநாடு ஒன்றில் நோய்வாய்ப்பட்ட நபர் தாயகம் திரும்பியதாக தகவல்

சவுதி அரேபியாவில் ஓட்டுனராக வேலைபார்த்து வந்த நிலையில் மூளையில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடுமையாக உடல்நலமுற்றிருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டினால் நேற்று முந்தினம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் புத்தளம் மதுரங்குளிய பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான சேகு அப்துல் காதர் இப்ராஹிம் என்ற நபர் கடந்த 2019 ம் ஆண்டு வாகனம் ஓட்டும் பணிக்காக வெளிநாடு போயிருந்த நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருமாறு அவரது குடும்பத்தினர் முகவரிடம் கோரிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *