கனடாவுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு வெளியான முக்கிய தகவல் – Dinaseithigal

கனடாவுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

இப்போது கனடாவிற்கு புலம்பெயர விரும்புபவர்களுக்கு வயது எவ்வளவு தூரம் முக்கிய இடம் வகிக்கிறது என்பது பலருக்கு தெரியாத விசயமாக உள்ளது. ஏனென்றால் தற்போது கனடாவில் பணியில் இருக்கும் பலர் அடுத்த சில வருடங்களில் ஓய்வு பெறவிருக்கும் நிலையில் அந்த இடத்திற்கு புதியவர்களை நியமிக்க இள வயதினரையே கனடா விரும்புகிறது. ஆகவே, 44 வயதிற்கு மேறபட்டவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவது பெரும்பாலும் குறைவானதாகவே காணப்படுகிறது. அங்கு எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தின் கீழ், CRS என்பது, புள்ளிகள் பிரகாரம் கனேடிய நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கும் ஒருவரை தரவரிசைப்படுத்தும் அமைப்பாகும். இந்த CRS என்னும் விரிவான தரவரிசைப்படுத்தும் அமைப்பில், குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் பெற்றால் மட்டுமே, விண்ணப்பம் செய்வதற்கான அழைப்பு அவர்களுக்கு விடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *