நாட்டில் பசியால் வாடும் குடும்பங்கள் – வெளிவந்த பகீர் விவரம் – Dinaseithigal

நாட்டில் பசியால் வாடும் குடும்பங்கள் – வெளிவந்த பகீர் விவரம்

தற்போது இலங்கையில் எரிபொருள் மற்றும் உணவுப் பண்டங்களின் விலை அதிகரிப்பு காரணமாக உணவைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும் இதனால் பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டம் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையில் சமீபகாலமாக தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. நாட்டு மக்களின் உணவு முறை ஆபத்தான நிலையில் இருப்பதுடன் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *