அரசுக்கு எதிராக கிளம்ப மக்களுக்கு அழைப்பு விடுத்த பேராயர் – Dinaseithigal

அரசுக்கு எதிராக கிளம்ப மக்களுக்கு அழைப்பு விடுத்த பேராயர்

நாட்டில் தேர்தலில் வாக்களிப்பது மக்களின் மிக முக்கியமான கடமை எனவும், தங்களின் வாக்களிப்பு வழியாக, மக்கள், இலங்கை அரசுக்கு தகுந்த பதிலளிக்க முடியும் எனவும், கர்தினால் மல்கம் இரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தலைநகர் கொழும்பு புறநகர்ப் பகுதியான மத்துமகல பிரதேசத்தில் உள்ள தூய இருதய ஆலயத்தில் இப்படி பேசியுள்ள, கொழும்பு பேராயர் கர்தினால் இரஞ்சித் , நாட்டின் பொதுத் தேர்தலோடு, உள்ளூராட்சி தேர்தல்களையும் நடத்தவேண்டும் என்று, தேசிய தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியிருக்கிறார் .நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, நடுத்தர மக்கள் ஏழ்மை நிலைக்கு மாறி, தினசரி உணவிற்கே கஷ்டப்படுகின்றனர் எனவும், ஞாயிறு மறைக்கல்விக்கு வரும் சிறார்களுக்கு முதலில் உணவு கொடுக்கப்படவேண்டியுள்ளது எனவும் கூறியுள்ள கர்தினால் இரஞ்சித், இந்நிலை மாற உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *