பல நாடுகள் தொடர்பில் சீனா போட்டுள்ள மிகப்பெரும் திட்டம் – Dinaseithigal

பல நாடுகள் தொடர்பில் சீனா போட்டுள்ள மிகப்பெரும் திட்டம்

தற்போது பிரிட்டன் , கனடா, உள்ளிட்ட 21 நாடுகளில் 30 சட்டவிரோத காவல் நிலையங்களை அமைத்து சீனா கண்காணித்து வருவதாக புலனாய்வு நாளேடான ரிபோர்டிகா செய்தி தெரிவித்துள்ளது . உலகின் வல்லரசாக தன்னைக் காட்டிக்கொள்ள உலகின் பல்வேறு நாடுகளிலும் இதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பிரான்ஸ், உக்ரைன், ஸ்பெயின், ஜெர்மனி, பிரிட்டன் , கனடா, அயர்லாந்த் ஆகிய நாடுகளில் இதுபோன்ற சீனக் காவல் நிலையங்கள் சட்டவிரோதமாக செயற்படுகின்றன. மேலும் கனடாவில் பொதுப் பாதுகாப்பு அமைப்புடன் சேர்ந்து இதுபோன்ற முறையற்ற காவல் நிலையங்களை சீனா திறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இவற்றில் மூன்று காவல் நிலையங்கள் கிரேட்டர் டொரோன்டோவில் மட்டும் உள்ளன. இத்தகைய சட்டவிரோத காவல் நிலையங்கள் மூலம் பல்வேறு நாடுகளில் நடக்கும் தேர்தலிலும் சீனா தனது ஆதிக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *