5-வது டி20 தொடர் – இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி – Dinaseithigal

5-வது டி20 தொடர் – இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்திருந்த. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றன. இரு அணிகள் இடையிலான 5வது டி-20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து வீரர் மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், வில்லி மற்றும் சாம் குரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ரூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டி-20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *