அடிக்கடி மீன் சாப்பிடலாமா? – Dinaseithigal

அடிக்கடி மீன் சாப்பிடலாமா?

* மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும்.

* தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் இதயம் மற்றும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்தலாம்.

* மீனில் இருக்கும் வைட்டமின் டி எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் ஏதாவதொரு மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்துவிடலாம்.

* மீன் சாப்பிடுவது மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. மனச்சோர்வு, மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் தினமும் மீன் சாப்பிட்டு வரலாம்.

* மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைப்பதோடு அவை சேருவதையும் தடுக்கும்.

* மீன் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *