மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குகிறேனா? எலான் மஸ்க் விளக்கம் – Dinaseithigal

மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குகிறேனா? எலான் மஸ்க் விளக்கம்

உலக பெரும் பணக்காரராரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், இங்கிலாந்தின் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போவதாக இன்று டுவீட் செய்து இருந்தார்.

உலகின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் அணியை மஸ்க் வாங்கப்போவதாக அறிவித்தது இணையத்தில் பேசுபொருளானது. இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள மஸ்க், “டுவிட்டரில் இந்த நகைச்சுவை நீண்ட நேரமாக தொடர்கிறது. நான் எந்த விளையாட்டு அணிகளையும் வாங்கவில்லை. ஒருவேளை நான் எந்த அணியையும் வாங்குவதாக இருந்தால், அது சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்த அணியாக இருந்த மான்செஸ்டர் யுனைடெட் அணியாக இருந்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *