ஐபிஎல் கிரிக்கெட் : கொல்கத்தா அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் – Dinaseithigal

ஐபிஎல் கிரிக்கெட் : கொல்கத்தா அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆனால் கடந்த ஏப்ரல்-மே மாதம் நடைபெற்ற 15-வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது.

இந்த சூழலில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக மெக்குல்லம் நியமிக்கப்பட்டதையடுத்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அவர் விலகினார். இதனைத் தொடர்ந்து தற்போது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அவர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் வழிநடத்தும் அணிகள்தான் பெரும்பாலும் சாம்பியன் பட்டம் வெல்கின்றன. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வென்று, போட்டியின் 87 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *