நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்கிய ஆம் ஆத்மி – Dinaseithigal

நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்கிய ஆம் ஆத்மி

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ‘மேக் இந்தியா நம்பர் 1’ என்ற பெயரில் ஆம் ஆத்மி கட்சி நாடு தழுவிய பிரசாரத்தை தொடங்கி உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த பிரச்சாரத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

டெல்லி டல்கத்தோரா விளையாட்டரங்கில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்றால், தற்போது வரை ஆண்டு கொண்டிருப்பவர்களிடம் அதை விட்டுவிட முடியாது என்று கூறினார்.

மேலும் கடந்த 75 ஆண்டுகளாக ஆண்டவர்கள் தங்கள் வீட்டையும், நண்பர்களையும் செல்வத்தால் வளப்படுத்தியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார். சிறந்த நிர்வாகத்தை முன்வைத்து தொடங்கியுள்ள இந்த பிரசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, ஆதரவு திரட்டுவதற்காக நாடு முழுவதும் அவர் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *