சந்தானம் நடிக்கும் ‘சாண்டா 15’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது..! – Dinaseithigal

சந்தானம் நடிக்கும் ‘சாண்டா 15’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது..!

நடிகர் சந்தானம் தற்போது கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சாண்டா 15’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்தானத்தின் 15வது படமான இது சந்தானத்துக்கு ஜோடியாக தன்யா ஹோப். மேலும் ராகினி திரிவேதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஃபார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவின்ராஜ் தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தின் மூலம் பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

இந்த நிலையில் ‘சாண்டா 15’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளனர் படக்குழுவினர். படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதோடு, காமெடி என்டர்டெய்னராக தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்ற அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *