இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 42 ஆயிரத்து 192 ஆக உயர்ந்தது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு தடப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து வரும் நிலையில், நாடு முழுவதும் இதுவரை 192 கோடியே 67 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 13,27,544 டோஸ்கள் அடங்கும்.
இதற்கிடையே நேற்று 4,58,924 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 84.79 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.